
Divine Meditation Theory Course
A perfect course for Holistic Wellness

ஒவ்வொரு மனிதனும் அவசியமாக புரிந்திருக்க வேண்டிய வாழ்வியல் மற்றும் மருத்துவப் புரிதல்களை முழுமையான தன்மையில்
இறைவழி தியான வகுப்புகளின் மூலம் கற்பிக்கின்றோம். விபஸ்ஸனா தியான முறையின் கோட்பாடுகள் மற்றும் அக்குபங்சர் வாழ்க்கை அறிவியல் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து இப்பயிற்சி வகுப்பின் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு மனிதனின் உயிர், மனம், சக்தி உடல், பருஉடல் ஆகிய தன்மைகளைப் பற்றிய விரிவான மற்றும் ஆழமான அறிவியல் வகுப்புகளாக
இறைவழி தியான வகுப்புகள் அமையும்.
அமைதியும் சமாதானமும் நிறைந்த ஒரு ஆரோக்கிய வாழ்விற்கான தேடல் உள்ளவர்களுக்கு 'இறைவழி தியான வகுப்புகள்'
மிகச்சரியான வழிகாட்டுதல்களை வழங்கும்.
இறைவழி தியான வகுப்புகள் இணைய வழியிலும், நேரடி வகுப்புகளாகவும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இறைவழி தியான வகுப்புகளின் அடிப்படையான பாடத்திட்டங்களை உங்கள் பார்வைக்கு இங்கே கொடுத்திருக்கின்றோம்
முடிவிலிக் கோட்பாடு பற்றிய அறிமுகமும் விளக்கமும்
கரு-உரு கோட்பாடு பற்றிய அறிமுகமும் விளக்கமும்
உடலின் கழிவு நீக்க செயல்முறையின் விளக்கம்
மனதின் இரட்டைத்தன்மைகள் பற்றிய விளக்கங்களும், பயிற்சிகளும்
கவனமும் விழிப்புணர்வும் - பயிற்சிகளும் விளக்கங்களும்
மனதின் அடுக்குகளும் பதிவுகளும் பற்றிய விளக்கங்கள்
மனதின் அடுக்குகளின் கெட்ட பதிவுகளை பலமிழக்கச்செய்வதற்கான பயிற்சிகள்
பஞ்சபூத சக்திகள் மற்றும் சக்தி உடல் பற்றிய விளக்கங்கள்
பஞ்சபூத சக்திகள் மற்றும் பஞ்சபூத உறுப்புகள் பற்றிய விளக்கங்கள்
பருஉடல் மற்றும் நோய் அறிகுறிகள் பற்றிய விளக்கங்கள்
இறை-உணர் சுவாசம் பற்றிய அறிமுகமும் விளக்கமும்
காலத்தின் முக்கியத்துவமும், காலத்தை உணரும் பயிற்சி முறையும்
நிலையின்மை விதி பற்றிய விளக்கங்களும் பயிற்சிகளும்
புறசூழல் தியான முறை பற்றிய விளக்கங்களும் பயிற்சிகளும்
மரண ஞானம் பற்றிய விளக்கங்களும் பயிற்சிகளும்
மனிதப் படைப்பின் கரு வளர்ச்சி நிலைகளை உணர்தலும் பயிற்சிகளும்
பஞ்சபூத உறுப்புகளின் ஞானங்களும் தியான முறைகளும்
இறைநிலை தியானமும் கர்ம யோகமும் பற்றிய விளக்கங்கள்
சுய இருப்பை உணர்தலின் விரிவான புரிதல்களும் தியானப் பயிற்சி முறைகளும்
இன்னும், மனம் எப்படி நோய்களின் மூல காரணமாக அமைகின்றது?
தியானம் என்பது என்ன? தியானத்தை எப்படி தொடங்க வேண்டும்?
தியானம் செய்வதால் எப்படி நோய்கள் குணமாகும்?
மனதின் சமநிலைத்தன்மை என்றால் என்ன?
எண்ணங்கள் ஏன் வருகின்றன?
உணர்வு - உணர்ச்சி என்றால் என்ன?
கெட்ட எண்ணங்களை கையாளுவது எப்படி?
மனசாட்சி (அ) உள்ளம் என்பது என்ன?
உயிராற்றலை சீராக்குவதும் பெருக்குவதும் எப்படி?
கவனச்சிதறல்கள் ஏன் ஏற்படுகின்றன?
கவனத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி?
கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபட தியானம் எப்படி உதவ முடியும்?
முக்தி என்பது என்ன? ஞானமடைதல் என்பது என்ன?
இறைவன் யார், தூதர்கள் யார், குரு யார்
போன்ற பல கேள்விகளுக்கான தெளிவுகளும், அந்தத் தெளிவில் நிலைத்திருப்பதற்கான வாழ்வியல் வழிமுறைகளும்
'இறைவழி தியான' வகுப்புகளில் கற்றுத்தரப்படும்
இறைவழி தியான வகுப்புகளில் கலந்து கொள்ள எங்களை தொடர்பு கொள்ளுங்கள்