
Acupuncture and
Energy Therapy Courses

எல்லாப் புகழும் இறைவனுக்கே!
மனித உடல் தோற்றமானது. அதனை பருஉடல் என்று சொல்கின்றோம். மனிதனின் மனமும் உயிரும் மறைவானது. இன்னும் சக்தி உடல் என்றும் மனிதனின் படைப்பம்சங்களில் ஒன்றானதாக இருக்கின்றது.
தோற்றமான தன்மைகளும் மறைவான தன்மைகளும் இந்த உலகத்தின் படைப்புகளின் அம்சங்களாக இருக்கின்றன. தோற்றமான தன்மைகளின் அதாவது கண்ணுக்குத் தெரியக்கூடிய தன்மைகளைப் பற்றிய அறிவியல் ஒரு வகை. மறைவானவற்றைப் பற்றிய அறிவியல் என்பது ஒரு வகை.
மறைவானதே தோற்றமானதை இயக்குகின்றது என்பதை நாம் அனைவரும் அறிந்தும் ஏற்றும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கு மனிதர்களாகிய நாமே ஒரு உதாரணம். நமது மனதின் தன்மைகள் தான் நமது வாழ்வின் தன்மைகளைத் தீர்மானிக்கின்றது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தவர்களே. ஒரு அழகான தோற்றமுடைய மனிதர் கெட்ட குணங்களைக் கொண்டிருப்பாரானால் அவரை நாம் விரும்ப மாட்டோம். ஆனால் நல்ல குணங்களைக் கொண்ட ஒரு மனிதரின் தோற்றத்தன்மையின் குறைபாடுகளை நாம் பெரிதுபடுத்த மாட்டோம். இதுபோல பல உதாரணங்களை மறைவான தன்மைகளின் முக்கியத்துவம் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம்.
தோற்றமான தன்மைகளைப் பற்றிய அறிவியல்களைக் கற்பதற்கு பெரும்பாலானவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். அதேநேரத்தில் மறைவான தன்மைகளின் அறிவியலைக் கற்பதுவும் எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும் நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பெரும்பாலான நோய்த்தன்மைகளின் மூல காரணம் அவர்களின் மனம் சார்ந்த தன்மைகளாகவே இருக்கின்ற நிலையில், ஒரு மருத்துவ அறிவியல் என்பது மனிதனின் மனம், சக்தி உடல் ஆகியவற்றைப் பற்றிய தெளிவுகளை நிறைவாக கொண்டதாக இருக்கும் பொது மட்டுமே, ஒரு நிரந்தர நிவாரணத்தை மனிதர்கள் பெற முடியும்.
அக்குபங்சர் வாழ்க்கை அறிவியல் என்பது, ஒரு மனிதனின் மறைவான தன்மைகளைப் பற்றிய நிறைவான வாழ்வியல் மற்றும் மருத்துவ ஞானங்களைக் கொண்டதாகும். மனிதர்களின் அனைத்து உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கும், மருந்து மாத்திரைகள் இன்றி, சுகமான இயற்கைத் தீர்வைத் தரக்கூடிய ஒரு ஒப்பற்ற மருத்துவ முறையாக அக்குபங்சர் மருத்துவ முறை இருந்து வருகின்றது.
அக்குபங்சர் வாழ்க்கை அறிவியல் மற்றும் அதன் மருத்துவ அணுகுமுறைகளைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு, ஒரு விரிவான மற்றும் ஆழமான விளக்கங்களைக் கொண்ட பாடத்திட்டங்களை பின்புலமாகக் கொண்ட பல்வேறு பயிற்சி வகுப்புகளை நாங்கள் வடிவமைத்திருக்கின்றோம்.
விருப்பமுள்ளவர்கள் எங்கள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். வகுப்புகள் குறித்த விபரங்கள் அறிய தொடர்பு கொள்ளுங்கள்.